பெர்சீவரன்ஸ் உலாவி விண்கலத்தின் உதவியுடன் நாசா விண்வெளி நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஆக்சிஜன்-உருவாக்கப் பரிசோதனையானது மிக வெற்றிகரமாக தனது பணியை முடித்து செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸிஜனை உருவாக்கியுள்ளது.
இது MOXIE (செவ்வாய்க் கிரகத்தில் இடம் சாரந்த ஆக்சிஜன் வளப் பயன்பாட்டு சோதனை) எனப்படும் நுண்ணலை கதிர்வீச்சு-அடுப்பின் அளவிலான சாதனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
MOXIE என்பது 2021 ஆம் ஆண்டில் அந்தக் கிரகத்தில் தரை இறங்கியதில் இருந்து பெர்சீவரன்ஸ் உலாவிக் கலத்தில் ஆக்ஸிஜனை உருவாக்கி வருகிறது.
மொத்தம் 122 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, நிறுவனத்தின் உற்பத்தி இலக்கு சார்ந்த எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் 98% அளவு தூய்மையானது அல்லது சிறந்தது என்ற நிலையில் இது எரிபொருள் மற்றும் சுவாச பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப் பட ஏற்றது.