TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கரிமப் பருப்பொருள்

July 27 , 2023 489 days 290 0
  • நாசாவின் பெர்செவரன்ஸ் உலாவி ஆய்வுக் கலமானது, செவ்வாய்க் கிரகத்தில் காணப் படும் நிலப்பகுதிகளில் கரிமச் சேர்மங்கள் இருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இது செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது பற்றியப் பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
  • செவ்வாய்க் கிரகத்தில் முன்பு கருதப்பட்டதை விட சிக்கலான பலக் கரிம வேதியியல் சுழற்சி நிகழ்வதை இது வெளிப்படுத்துகிறது.
  • இது செவ்வாய்க் கிரகத்தில் ஆற்றல் மிக்க பல்வேறு கரிம மூலக்கூறு இருப்புகள் இருப்பதைக் குறிக்கிறது.
  • செவ்வாய்க் கிரகம் நீர்நிலை உருவாக்கச் செயல்முறைகளை எதிர்கொண்டதாகவும், கரிமப் பருப்பொருட்களின் இருப்பில் நீர் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்து இருக்கலாம் என்றும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
  • இந்த ஆராய்ச்சிக் குழுவானது, கரிமச் சேர்மங்களைக் கண்டறிவதற்காக கரிமங்கள் மற்றும் வேதிப் பொருட்களுக்கான இராமன் விளைவு மற்றும் ஒளிர்வு (SHERLOC) உடன் கூடிய சூழல்களை ஆய்வு செய்யும் கருவியை  பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்