செவ்வாய்க் கிரகத்தில் 'பிரம்மாண்டமான' எரிமலை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் பிரம்மாண்டமான புவியியல் அம்சத்திற்கு ‘நோக்டிஸ் எரிமலை’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
29,600 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை, சுமார் 450 கிலோமீட்டர் அகலத்தில் நீண்டு உள்ளது.
இந்த எரிமலை அமைந்துள்ள இடம் ஆனது கிழக்கு நோக்டிஸ் லாபிரிந்தஸில் செவ்வாய்க் கிரகத்தின் நிலநடுக்கோட்டிற்கு தெற்கிலும், அந்தக் கிரகத்தின் பரந்தப் பள்ளத்தாக்கு அமைப்பான வால்ஸ் மரைனெரிஸின் மேற்கிலும் அமைந்துள்ளது.