TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் ஊதா நிற துருவ மின்னொளி

June 21 , 2024 156 days 244 0
  • நாசா சமீபத்தில் செவ்வாய்க் கிரகத்தில் இரவில் நிகழ்ந்த துருவ மின்னொளிகளின் ஒளிப்படக் காட்சியினைப் பகிர்ந்துள்ளது.
  • இந்த வண்ணமயமான ஊதா நிற துருவ மின்னொளிகள் செந்நிறக் கிரகத்தின் மீது எவ்வாறு பரவின என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
  • இந்தப் படங்கள் நாசாவின் MAVEN (செவ்வாய் வளிமண்டலம் மற்றும் ஆவியாகும் தன்மையின் பரிணாமம்) சுற்றுக் கலத்தினால் எடுக்கப்பட்டன.
  • துருவ மின்னொளிகளானது சூரியப் புயல்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் பெற்ற துகள்கள் ஒரு கிரகத்தின் காந்தப்புலக் கோடுகளுக்கு அருகில் செல்லும் போது தெரியும் வண்ணமயமான ஒளிகள் ஆகும்.
  • முன்னொரு காலத்தில் செவ்வாய்க் கிரகமானது அதன் உட்பகுதியில் உருவாக்கப்பட்ட காந்தப்புலத்தை இழந்தது எனவே ஆற்றல்மிக்கத் துகள்களின் தாக்குதலிலிருந்து அது பாதுகாப்பு பெற்றிருக்கவில்லை.
  • மின்னூட்டம் பெற்றத் துகள்கள் செவ்வாய் வளிமண்டலத்தைத் தாக்கும் போது, ​​அது முழு கிரகத்திலும் பரவும் துருவ மின்னொளிகளைத் தோற்றுவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்