செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதியின் கழிமுகத்தில் இருந்து பல கரிமப் பாறை மாதிரிகளை பெர்ஸெவரன்ஸ் உலாவிக் கலமானது சேகரித்துள்ளது.
இந்த மாதிரிகள் தற்சமயம் எதிர்கால செவ்வாய்க் கிரகத்திற்கான ஆய்வு கலங்களால் சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்பட உள்ள தொகுப்புகளோடுச் சேர்த்து வைப்பதற்காகச் சேமித்து வைக்கப்பட உள்ளது.
இந்த ஆய்வுப் பணி தொடங்கியதிலிருந்து இதுவரை சேமிக்கப்பட்ட மாதிரிகளில், இந்தப் பாறை மாதிரிகள் அதிக கரிமப் பொருட்களின் செறிவைக் கொண்டுள்ளன.
சமீபத்தியச் சேகரிப்புடன், இந்த உலாவிக் கலம் தற்போது மொத்தம் 12 மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
பெர்ஸெவரன்ஸ் கலம் சேகரித்தப் பாறைகளில் ஒன்றிற்கு வைல்ட்கேட் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, உப்பு நீர் ஏரியில் சேறும் மணலும் ஆவியாகிப் போனதால் இந்தப் பாறை உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.