நாசாவின் ‘ஆறு சக்கர புவியியல் ஆய்வுக் கருவியான,’ பெர்சீவெரன்ஸ் என்ற உலாவிக் கலமானது, செவ்வாய்க் கிரகத்தில் தூசுக்கள் நிறைந்த சுழல் காற்றினைத் தனது ஒளிப் படக் கருவியில் படம் பிடித்துள்ளது.
இந்த சுழல் காற்றானது, பூமியில் நிகழும் சுழல் காற்றினை போன்றே உள்ளது.
பொதுவாக, செவ்வாய்க் கிரகத்தில் நிகழும் சுழல்காற்றுகள் நமது கிரகத்தில் காணும் சுழல் காற்றினை விட சிறியதாக இருக்கும்.
ஆனால் சுழல் காற்றின் தாக்கமற்ற பகுதியின் அடிப்படையிலான கணக்கீடுகளின் படி, இவை சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.2 மைல்) உயரம் இருந்தது.
இது ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் ஏற்படும் வழக்கமான சுழல் காற்றினை விட மிக உயரமானது என்பதோடு, இது அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை விட ஐந்து மடங்கு உயரம் ஆகும்.
இந்த உலாவிக் கலமானது, “தோரோஃபேர் முகடு” என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஏற்பட்ட இந்த சுழல் காற்றினைப் பதிவு செய்துள்ளது .
இது பெர்சீவெரன்ஸ் உலாவிக் கலத்தில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் அல்லது 2.5 மைல் தொலைவில் இருந்தது.
இது மணிக்கு 19 கிலோமீட்டர் அல்லது 12 மைல் வேகத்தில் நகர்ந்தது.
தற்போதைய மதிப்பீட்டின்படி, அதன் அகலம் சுமார் 200 அடி (அல்லது 60 மீட்டர்) ஆகும்.