நாசாவின் பர்சீவெரன்ஸ் மார்ஸ் ரோவர் என்ற உலாவி, ஃபோபோஸில் நிகழ்ந்த ஒரு கிரகணத்தின் காணொளியைப் படம் பிடித்துள்ளது.
போபோஸ் என்பது செவ்வாய்க் கிரகத்தின் இரண்டு துணைக் கோள்களுள் ஒன்றாகும்.
இந்த செவ்வாய்க் கிரகணம் ஆனது, துணைக் கோள்களின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் குறித்த புதிய கண்ணோட்டத்தை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது.
ஃபோபோஸ் என்ற ஒரு துணைக்கோள் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வருவதோடு, அது இன்னும் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிரகத்துடன் மோதும்.