TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் நீர்த் தேக்கப் பகுதிகள்

August 22 , 2024 94 days 130 0
  • செவ்வாய்க் கிரகத்தின் பாறைப் பாங்கான வெளிப்புறக் கண்ட மேலோட்டின் உள் பகுதியில் திரவ நீர்த் தேக்கப் பகுதிகள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்தக் கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • நாசாவின் மார்ஸ் Insight தரையிறங்கு கலமானது நான்கு ஆண்டுகாலமாக செந்நிறக் கிரகத்தின் உள் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் - அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளது.
  • செவ்வாய்க் கிரகத்தின் கண்ட மேலோட்டில் சுமார் ஆறு முதல் 12 மைல்கள் (10 முதல் 20 கிமீ) ஆழத்தில் இந்த நீர்த் தேக்கங்கள் இருப்பதைப் பகுப்பாய்வு வெளிப்படுத்தி உள்ளது.
  • பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகம் அதன் காந்தப்புலத்தையும் வளிமண்டலத்தையும் இழந்த போது அங்கு பரவியிருந்த நீர் மூலக்கூறுகள் அழிந்து போனதாக கருதப் படுகிறது.
  • செவ்வாய்க் கிரகத்தின் துருவப் பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதும், அதன் வளி மண்டலத்தில் நீராவி காணப் படுவதற்குமான சான்றுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்