செவ்வாய்க் கிரகத்தின் பாறைப் பாங்கான வெளிப்புறக் கண்ட மேலோட்டின் உள் பகுதியில் திரவ நீர்த் தேக்கப் பகுதிகள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்தக் கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாசாவின் மார்ஸ் Insight தரையிறங்கு கலமானது நான்கு ஆண்டுகாலமாக செந்நிறக் கிரகத்தின் உள் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் - அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் கண்ட மேலோட்டில் சுமார் ஆறு முதல் 12 மைல்கள் (10 முதல் 20 கிமீ) ஆழத்தில் இந்த நீர்த் தேக்கங்கள் இருப்பதைப் பகுப்பாய்வு வெளிப்படுத்தி உள்ளது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகம் அதன் காந்தப்புலத்தையும் வளிமண்டலத்தையும் இழந்த போது அங்கு பரவியிருந்த நீர் மூலக்கூறுகள் அழிந்து போனதாக கருதப் படுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் துருவப் பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதும், அதன் வளி மண்டலத்தில் நீராவி காணப் படுவதற்குமான சான்றுகள் உள்ளன.