நாசாவின் இன்சைட் என்ற தரையிறங்கும் கலமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பைத் தாக்கி வரும் நான்கு விண்வெளிப் பாறைகளின் அதிர்வுகளை 'பதிவு செய்து' கண்டறிந்துள்ளது.
ஒரு விண்கலமானது, நில அதிர்வு மற்றும் ஒலி அலைகள் ஆகிய இரண்டையும் ஒரு தாக்கத்தின் மூலம் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
2018 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய பிறகு, இன்சைட் கலம் கண்டறிந்த முதல் தாக்கம் இதுவாகும்.
இன்சைட் கலம் கண்காணித்த விண்வெளிப் பாறைகள் - ஒன்று 2020 ஆம் ஆண்டில் மோதிய போதும் மற்றொன்று 2021 ஆம் ஆண்டில் மோதிய போதும் கண்டறியப்பட்டது.
செவ்வாய்க் கிரகமானது, நமது சூரிய மண்டலத்தின் குறுங்கோள் மண்டலத்திற்கு அருகாமையில் உள்ளது.
இது பூமியை விட மிக அதிகமாக விண்வெளிப் பாறைகளால் தாக்கப்பட்டு பாதிக்கப் படக் கூடியதாக உள்ளது.