செவ்வாய்க் கோளில் ஆதிகாலப் பெருங்கடல் இருந்ததற்கான சான்றுகள்
March 1 , 2025 3 days 54 0
சீனாவின் ஜுரோங் உலாவிக் கலமானது, செவ்வாய்க் கிரகத்தின் கரடுமுரடான நிலப் பரப்பில் ஒரு புதிய கடற்கரையைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கடற்கரை ஆனது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்து காணப் படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பானது, மிகத் தோராயமாக 3.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டியூடெரோனிலஸ் என்று அழைக்கப்படுகின்ற கருதுகோள் சார் பெருங்கடல் இருப்பதைக் குறிக்கும் சமீபத்திய சான்றாகும்.
பூமி, செவ்வாய் மற்றும் சூரிய மண்டலத்தின் பிற கிரகங்கள் தோராயமாக சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.
செவ்வாய்க் கிரகத்தின் வரலாற்றில் சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கிரகத்தின் காலநிலை வியத்தகு முறையில் மாறிய போது டியூட்டரோனிலஸ் மறைந்திருக்கும் என நம்பப்படுகிறது.