நாசாவின் இன்சைட் விண்கலமானது, தனது முதலாவது கருவியான நிலநடுக்க மானியை (SEIS - Seismometer) செவ்வாய் கிரகத்தில் பொருத்தியுள்ளது.
புவியைத் தவிர்த்து மற்றொரு கிரகத்தின் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது கருவி இந்த நிலநடுக்கமானியாகும். இது செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.