TNPSC Thervupettagam

செவ்வாய் கிரகத்தில் லாவா அடுக்கு

January 24 , 2023 545 days 293 0
  • செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பினை, மேல்நோக்கித் தள்ளுகின்ற, தீவிர எரிமலை மற்றும் நில அதிர்வு இயக்கங்களை இயக்குகின்ற ஒரு மாபெரும் லாவா அடுக்கு இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • அதன் மத்திய ரேகைக்கு வடக்கே அமைந்துள்ள எலிசியம் பிளானிஷியா எனப்படும் தாழ்வான பகுதிக்கு அடியில் இது அமைந்துள்ளது.
  • பூமி மற்றும் வெள்ளி ஆகிய கோள்களில் லாவா அடுக்குகள் செயல்பாட்டில் உள்ளன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன.
  • லாவா அடுக்கு என்பது ஒரு கிரகத்தின் நில உட்பரப்பிலிருந்து மேற்பரப்பை நோக்கி எழுகின்ற உருகியப் பாறையின் பெரிய குமிழ்கள் ஆகும்.
  • அவை இடைநிலை அல்லது கவச அடுக்குகளின் வழியாகத் தள்ளப்பட்டு மேலோட்டின் அடிப்பகுதியில் குவிகின்றன.
  • இந்தப் புவியியல் நிகழ்வினை லாவா அடுக்கில் இருந்து சூடான பாறைக் குழம்புகள் பாறைப் பிளவுகளில் இருந்து வெளியேறி பெரிய எரிமலைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்ற ஹவாய் பகுதிகளில் காணலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்