TNPSC Thervupettagam

சேதுசமுத்திர கால்வாய் திட்டம்

January 17 , 2023 681 days 740 0
  • வெகு நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கையிலெடுக்க வலியுறுத்தி தமிழகச் சட்டப் பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களுக்கு இடையிலான கடல் போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்பதோடு, இதன் மூலம் கப்பல்கள் இலங்கையை சுற்றிப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க முடியும்.
  • இது பனாமா மற்றும் சூயஸ் கால்வாய்களுக்கு நிகரான கடல் வர்த்தகத்திற்கு உதவும் என்று கருதப் படுகிறது.
  • இது குறித்த கருத்தாக்கமானது, முதன் முதலில் 1860 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தினை, பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 2005 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார்.
  • சமய அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • 2007 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையே ஏற்பட்ட சட்ட மோதலைத் தொடர்ந்து இத்திட்டம் முடக்கப்பட்டது.
  • இராமர் சேது என்பது இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இராமேஸ்வரம் தீவிற்கும் இலங்கையின் வடமேற்கில் உள்ள மன்னார் தீவிற்கும் இடையில் உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன சங்கிலித் தொடர் அமைப்பாகும்.
  • இந்து புராணங்களின் படி, இந்தப் பாலம் ஆனது ஹனுமான் மற்றும் அவரது படை வீரர்களால் பகவான் ஸ்ரீராமருக்கு உதவுவதற்காக கட்டப்பட்டது.
  • இந்தக் கால்வாய் அமைக்கும் திட்டமானது, பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்புக்குக் கணிசமான அளவில் சேதத்தினை ஏற்படுத்தும்.
  • முன்கூட்டியே கணிக்க முடியாத புயல்கள் அவ்வப்போது எழுவதால் இப்பகுதியினை மிகவும் பாதிக்கப்படக் கூடியதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்