TNPSC Thervupettagam

சேவா போஜ் யோஜனா

June 6 , 2018 2368 days 2383 0
  • மக்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற அனைத்து மத தொண்டு நிறுவனங்களுக்கும் சிறப்பு நிதியியல் உதவியினை வழங்குவதற்காக மத்திய கலாச்சார அமைச்சகமானது சேவா போஜ் யோஜனா (Seva Bhoj Yojna) எனும் புதிய திட்டத்தைத் துவங்கியுள்ளது.

  • மாதத்திற்குக் குறைந்த பட்சம் 5,000 நபர்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற, ஐந்து ஆண்டு காலமாக இருக்கின்ற மடாலயங்கள் (monasteries), தர்காக்கள் (dargahs), ஆசரமங்கள்(ashrams), திருச்சபைகள்(churches), மசூதிகள் (mosques), குருத்துவாராக்கள் (gurudwaras), கோயில்கள்(temples) போன்ற நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையனவாகும்.
  • இதற்காக இந்த நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Services Tax -CGST), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரித் (Integrated Goods and Services Tax -IGST) தொகையானது மத்திய அரசினால் இந்நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த மத நிறுவனங்களை “தர்பன்” (Darpan) எனும் இணைய வாயிலில் கலாச்சார அமைச்சகம் பதிவு செய்யும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்