மக்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற அனைத்து மத தொண்டு நிறுவனங்களுக்கும் சிறப்பு நிதியியல் உதவியினை வழங்குவதற்காக மத்திய கலாச்சார அமைச்சகமானது சேவா போஜ் யோஜனா (Seva Bhoj Yojna) எனும் புதிய திட்டத்தைத் துவங்கியுள்ளது.
மாதத்திற்குக் குறைந்த பட்சம் 5,000 நபர்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற, ஐந்து ஆண்டு காலமாக இருக்கின்ற மடாலயங்கள் (monasteries), தர்காக்கள் (dargahs), ஆசரமங்கள்(ashrams), திருச்சபைகள்(churches), மசூதிகள் (mosques), குருத்துவாராக்கள் (gurudwaras), கோயில்கள்(temples) போன்ற நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையனவாகும்.
இதற்காக இந்த நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Services Tax -CGST), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரித் (Integrated Goods and Services Tax -IGST) தொகையானது மத்திய அரசினால் இந்நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த மத நிறுவனங்களை “தர்பன்” (Darpan) எனும் இணைய வாயிலில் கலாச்சார அமைச்சகம் பதிவு செய்யும்.