இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை, ஓர் உறுதி மிக்க சைகை அடிப்படையிலான உயிரியல் அளவியல் பதிவு முறையை உருவாக்கச் செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
பதிவு அமைப்புடன் ஒருங்கிணைந்த வகையிலான ஒரு இயக்க மாதிரியுடன், எளிதில் சுமந்து செல்லும் வகையிலான கைரேகைப் பதிவு அமைப்பை உருவாக்க அந்த இரு அமைப்புகளும் ஒரு கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளன.
இது முக அங்கீகாரத்தைப் போன்றே, கைரேகை அங்கீகாரத்தையும் வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும்.