சைக்ளோன் 30 – இந்தியாவின் மிகப்பெரிய துகள் முடுக்கி
September 20 , 2018 2258 days 790 0
கொல்கத்தாவில் உள்ள VECC என்ற நிறுவனத்தில், இந்தியாவின் மிகப்பெரிய துகள் முடுக்கியான ‘துகள் முடுக்கி–30’ ஆனது மருத்துவ பயன்பாட்டிற்காக நடைமுறைக்கு வந்துள்ளது.
இது இந்திய அணுசக்தித் துறையின் (DDE) கீழ் உள்ளது. மேலும் இது 2019-ல் செயல்பட உள்ளது.
இந்த வசதியானது புற்றுநோய் சிகிச்சைக்காக நோயறிதல் வசதியையும் அதற்கு சிகிச்சையளிக்கும் பயன்பாடுகளுக்கு மலிவு விலையில் கதிரியக்க ஓரகத் தனிமங்களையும் அதன் தொடர்புடைய கதிரியக்க மருந்துகளையும் வழங்கக்கூடியது.