TNPSC Thervupettagam

சைபர் ஷிக்ஷா திட்டம்

October 9 , 2018 2239 days 701 0
  • மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் இந்திய தரவு பாதுகாப்பு ஆணையம் (DSCI - Data Security Council of India) ஆகியவை இணைந்து சைபர் ஷிக்ஷா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இந்த சைபர் ஷிக்ஷா திட்டமானது இணைய பாதுகாப்பு துறையில் பெண் பொறியியல் பட்டதாரிகளின் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் (MeiTY) இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • முதல் மற்றும் இரண்டாம் நிலை (Tier) நகரங்களிலிருந்து போதிய அளவு பெண்களை இணைய பாதுகாப்பு துறையின் ஒரே தொழில் பாதையில் ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் (CDAC - Centre for Development of Advanced Computing) இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சியளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்