உலக பூப்பந்தாட்டக் கூட்டமைப்பானது (Badminton World Federation-BWF) சையது மோடி சர்வதேச பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் இந்தியாவின் லக்னோவில் நடத்தியது.
சையது மோடி சர்வதேசப் போட்டி என்பது 1982 காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியனான சையத் மோடியின் நினைவாக பெயரிடப்பட்ட HSBC BWF உலக சுற்றுப்பயண சூப்பர் 300 என்ற ஒரு போட்டித் தொடர் ஆகும்.
சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முனைப்பில், இந்தியாவின் 24 வயதான சமீர் வர்மா சீனாவின் லூ குவான்ங்சூவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் வென்றார்.
சாய்னா நெஹ்வால் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹான் யூயிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் பிற வெற்றியாளர்கள்
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி - ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்.
அஸ்வினி பொன்னப்பா மற்றும் ரெட்டி N. சிக்கி - மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்.
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா - இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம்.