TNPSC Thervupettagam
May 28 , 2019 1889 days 562 0
  • படைத் தளபதி சைலேஷ் தினாய்கர் என்பவர் ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் தெற்கு சூடானுக்கான ஐ.நா திட்டத்தின் (UN Mission in South Sudan - UNMISS) படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த மாதத்தில் UNMISS படைத் தலைவர் என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள ருவாண்டாவைச் சேர்ந்த படைத் தலைவரான பிரான்க் காமன்சி என்பவருக்கு அடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இது இரண்டாவது மிகப் பெரிய அமைதிக் காப்பு நடவடிக்கையாகும்.
  • இது சூடானிலிருந்துத் தெற்கு சூடான் விடுதலை பெற்ற பின்பு 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இவர் UNMISS-ல் 2400 இந்திய வீர்கள் உள்பட 16,000 அமைதிப் படை வீரர்களை வழி நடத்த விருக்கின்றார்.
  • 1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ மையத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர், தனது தன்னிகரில்லாத சேவைக்காக சேனா விருது மற்றும் விஷிஷ்த சேவா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலை
  • இவர் தற்பொழுது மஹோவில் அல்லது டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள இந்திய இராணுவ காலாட் படைப் பள்ளியின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.
  • மத்தியப் பிரதேசத்தின் மஹோவில் உள்ள இராணுவப் பள்ளியானது இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான இராணுவப் பயிற்சி மையமாகும்.
  • இராணுவப் பள்ளியின் ஒரு பகுதியான இராணுவ துப்பாக்கிச் சுடுதல் பிரிவின் கீழ் இயங்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் அணிக்கும் இந்த நிறுவனம் பயிற்சியளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்