TNPSC Thervupettagam

சொகுசு வீடுகளின் விலை உயர்வு

March 8 , 2023 499 days 273 0
  • சொத்துகள் தொடர்பான துறை ஆலோசக நிறுவனமான நைட் ஃபிராங்க் சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு ‘சொத்து அறிக்கையினை' வெளியிட்டது.
  • உலக நாடுகளில் ஆடம்பர (சொகுசு) வீடுகளின் விலை உயர்வுப் பட்டியலில் 92 வது இடத்தில் இருந்த மும்பை மாநகரம் 37 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • மும்பையின் பிரதான (உயர்மதிப்பு) சொத்துச் சந்தையானது, உலகளவில் 6.4 சதவீதம் விலை உயர்வினைக் கண்டுள்ளது.
  • உயர்மதிப்புச் சொத்துகளின் விலைகளில் 3 சதவீதம் என்ற உயர்வுடன் பெங்களூரு நகரமானது 62வது இடத்தில் உள்ளது.
  • இதில் 1.2 சதவீத உயர்வுடன், 2021 ஆம் ஆண்டில் 93வது இடத்திலிருந்த டெல்லி 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இந்த அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள ஆடம்பர வீடுகளின் விலையானது ஆண்டிற்கு 5.2 சதவீதம் (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் துபாயில் உள்ள உயர்மதிப்புக் குடியிருப்புகளின் விலைகள் 44.2 சதவீதம் உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
  • கொலராடோவின் ஆஸ்பென் நகரம் 27.6 சதவீத விலை உயர்வுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ரியாத் (25 சதவீதம்) இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்