TNPSC Thervupettagam

சொத்து உரிமையாளர்கள் சங்க வழக்கு - 1992

November 9 , 2024 16 days 88 0
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 39(b) என்ற பிரிவின் கீழ் அனைத்து வகையிலான தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
  • சரத்து 39(b) ஆனது, பொது மக்களுக்கான ஒரு சிறந்த சேவையினை வழங்குவதற்காக "சமூகத்தின் வளங்கள்" பகிர்ந்தளிக்கப் படுவதை உறுதி செய்வதற்கான பல்வேறு கொள்கைகளை அரசாங்கம் வழிநடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
  • இருப்பினும், இந்த இலக்குடன் மாநிலங்கள் பெருமளவில் ஒருங்கி இருந்தால், குறிப்பிட்ட வழக்குகளில் சில தனிப்பட்டச் சொத்துக்களை உரிமை கோரலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 39(b) சரத்துப் பிரிவினை நடைமுறைப் படுத்துவதற்காக இயற்றப்பட்டச் சட்டங்களை பாதுகாக்கும் "சட்டப் பாதுகாப்பாக" சரத்து 31C உள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (இருபத்தி ஐந்தாவது) திருத்தத்தின் மூலம் பொது உடைமைப் பொருளாதாரக் கொள்கையை பாதுகாப்பதற்கு வேண்டி சரத்து 31C ஆனது சேர்க்கப்பட்டது.
  • நீதிபதி கிருஷ்ண ஐயர் தலைமையிலான 1978 ஆம் ஆண்டு வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப்பின் படி, எந்தவொரு தனி நபர்களின் சொத்துக்களும் சமூகச் சொத்துகளாகக் குறிப்பிடப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்