TNPSC Thervupettagam

சொத்து விவரங்கள் குறித்த அறிக்கை 2023

March 16 , 2023 491 days 245 0
  • உலகளாவிய மனை விற்பனை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமான நைட் ஃபிராங்க், 2023 ஆம் ஆண்டிற்கான அதன் சொத்து விவரங்கள் குறித்த ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பிரதான மனை சார்ந்த சொத்துச் சந்தையின் போக்குகள் மற்றும் செயல்திறன் பற்றிய நுண்ணறிவுகளை இந்த அறிக்கை வழங்குகிறது.
  • இந்த மதிப்பீட்டில் பங்கேற்ற இந்தியர்களில், 2022 ஆம் ஆண்டில் UHNWI நபர்களின் (மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள்) செல்வத்தில் 88 சதவீத உயர்வு ஏற்பட்டது.
  • கடந்த ஆண்டில் இந்தியாவின் அதிக-உயர்-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் செல்வம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • 47 சதவீதத்தினர் தங்களின் சொத்து மதிப்பானது, 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
  • 53 சதவீதம் பேர் அவர்களது சொத்துகள் முந்தைய ஆண்டை விட, குறைந்தது 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கின்றனர்.
  • இந்தியாவின் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் முதலீடு செய்யத் தக்க சொத்துகள் பெரும்பாலும் பங்குகள், வீட்டுமனை மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றில் இடப்பட்டுள்ளது என்றும் இந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
  • உலகளவில் உள்ள பணக்காரர்களை விட இந்தியாவின் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களால் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப் பட்டு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்