TNPSC Thervupettagam

சொலிசிட்டர் ஜெனரல் ராஜிநாமா

October 20 , 2017 2641 days 1707 0
  • இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான ரஞ்சித் குமார் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல்
  • இந்தியாவின் அட்டர்னி ஜெனரலுக்கு உதவிபுரியும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியானது நாட்டின் இரண்டாவது உயரிய சட்ட அதிகாரிப் பணியாகும். அவருக்கு உதவியாக பல கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் இருப்பர்.
  • சொலிசிட்டர் ஜெனரல் பற்றி அரசியலமைப்பில் எந்த ஒரு குறிப்பும் இல்லை.
  • இது ஓர் சட்டப்பூர்வ பதவியாகும் (Statutory Post).
  • 3 ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்படுவார்.
  • நியமனங்களுக்கான கேபினேட் அமைச்சரவை குழு (Appointment Committee of Cabinet) சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களை நியமிக்கின்றது.
  • ஆனால் அட்டர்னி ஜெனரலை இந்திய குடியரசுத்தலைவர் விதி 76(1) ன் கீழ் நியமிப்பார்.
  • சொலிசிட்டர் ஜெனரலின் பணிகள் சட்ட அதிகாரிகள் (பணி நிலைகள் ) விதி 1987  ன் படி நிர்வகிக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் படி அல்ல.
  • அனால் அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் மற்றும் பணிகள் அரசியலைப்பு சட்டத்தின் விதி 76 ன் படி வரையறுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்