TNPSC Thervupettagam

சோடியம் உட்கொள்ளல் குறைப்பு பற்றிய உலகளாவிய அறிக்கை

March 24 , 2023 483 days 254 0
  • உலக சுகாதார அமைப்பானது சோடியம் உட்கொள்ளல் குறைப்புப் பற்றி உலகளாவிய அறிக்கை என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலக மக்கள் உட்கொள்ள வேண்டிய சராசரி உப்பின் அளவு ஒரு நாளைக்கு 10.8 கிராம் என்று மதிப்பிடப் பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இளம் பருவத்தினர் உட்கொள்ள வேண்டிய உப்பின் அளவு, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
  • இந்த அறிக்கையானது ஒவ்வோர் உறுப்பினர் நாடுகளுக்கும் 1 (குறைந்த அளவு) முதல் 4  (அதிக அளவு) வரை என்ற அளவீட்டில் உலக நாடுகளின் சோடியம் மதிப்பெண் அளவினைக் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த மதிப்பெண் ஆனது சோடியம் குறைப்புக் கொள்கைகள் மற்றும் பிற பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதலின் நிலையினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப் படுகிறது.
  • உலக நாடுகளின் சோடியம் மதிப்பெண் ஆனது, உலக மக்களின் உணவு சோடியம் உட்கொள்ளல் மற்றும் இருதய நோய்கள் தொடர்பான கொள்கைகளின் முன்னேற்றத்தின் தாக்கத்தை மதிப்பிடப் பயன்படுத்தப் படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் அனைத்து 194 உறுப்பினர் நாடுகளும் 2013 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு உறுதிப்பாடு மேற்கொண்டிருந்தாலும், 5% நாடுகள் மட்டுமே விரிவான சோடியம்-குறைப்பு கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
  • உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பினர் நாடுகளில், உலக நாடுகளின் சோடியம் மதிப்பெண்ணில் 56 நாடுகள் மதிப்பெண் 1 என்ற மதிப்பெண்ணைக் கொண்டுள்ளன.
  • 98 நாடுகள் தன்னார்வ அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளைச் செயல்படுத்தி அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • இத்தகையக் கொள்கைகள் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் 7 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்