TNPSC Thervupettagam

சோடியம் நைட்ரைட் மீது பொருள்குவிப்பு தடுப்பு வரி

August 27 , 2017 2680 days 951 0
  • மத்திய நிதி அமைச்சகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோடியம் நைட்ரைட் மீது ஐந்தாண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி (Anti-dumping duty) விதித்துள்ளது.
  • வர்த்தக அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பினுடைய மூன்றாவது மறு ஆய்வுக் கூட்டத்தின் ஆய்வின் படி இந்த வரி விதிப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோடியம் நைட்ரைட் மீதுடன் ஒன்றுக்கு95 டாலர் மதிப்பிலான பொருள் குவிப்பு தடுப்பு வரியினை வருவாய்த்துறை விதிக்க இருக்கிறது.
  • சோடியம் நைட்ரைட் ஆனது ஆக்சிஜனேற்ற மற்றும் ஒடுக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. இது வெள்ளை நிற படிகத் தூள்களால் ஆனது. இது மருந்து மற்றும் சாயத் தொழிற்சாலைகளிலும், உயவுப் பொருள்கள் மற்றும் கட்டுமான வேதிப் பொருள்கள் தயாரிப்புகளிலும் ரப்பர் விரிவாக்கும் தொழிற்சாலைகளிலும், இறைச்சித் தயாரிப்புக் கூடங்களிலும் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது.
  • இந்தியாவில், சோடியம் நைட்ரைட்டை பஞ்சாப் வேதிப்பொருட்கள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு தொழிற்சாலை (Punjab chemicals & Crop Protection Ltd), தேசிய உரத் தொழிற்சாலை (National Fertisers Ltd) மற்றும்ராஷ்டிரிய வேதிப்பொருட்கள் மற்றும் உரத் தொழிற்சாலைகள் நிறுவனம் (Rashtriya Chemicals & Fertilisers Limited) தயாரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்