இந்த வருடம் (2018) அக்டோபர் 11 அன்று ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு (Soyuz MS -10), ரஷ்யா, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு விண்வெளி வீரர்களுடன் சென்ற முதலாவது மனித விண்கலமான சோயுஸ் (Soyuz) வகையைச் சார்ந்த சோயுஸ் MS-11 என்ற விண்கலமானது வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது.
இந்த விண்கலத்தில் பயணித்த மூன்று விண்வெளி வீரர்கள்
ரஷ்யாவின் ஓலெக் கோனோனென்கோ
நாசாவின் அன்னி மெக்கலன்
கனடா விண்வெளி நிறுவனத்தின் டேவிட் செயின்ட் ஜாக்கஸ் ஆகியோராவர்.
இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறரை மாதத்திற்குத் தங்கி இருப்பர்.
இது கடந்த (2018) அக்டோபர் மாதத்தில் விண்கல ஏவுதல் தோல்வியடைந்த பின்னர் சோவியத் சகாப்தத்தின் சோயுஸ் விண்கலத்தில் மனிதர்கள் பயணம் செய்யும் முதல் சோயுஸ் விண்கல ஏவுதல் ஆகும்.