ஒலெக் ஓவ்சினின், இவான் வாக்னர் மற்றும் டொனால்ட் பெட்டிட் ஆகிய நபர்களை உள்ளடக்கிய கொண்ட சோயுஸ் MS-26 விண்கலத்தின் குழுவினர் மேற்கொண்ட ஒரு விண்வெளிப் பயணம் முடிந்து அவர்கள் கஜகஸ்தானின் ஜெஸ்காஸ்கன் பகுதியில் தரையிறங்கினர்.
அவர்கள் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் விண்வெளிச் சுற்றுப்பாதையில் பணியாற்றினர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80 ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இது விண்ணில் ஏவப்பட்டது.
ஒரு சோயுஸ் விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் பயணிக்க முடியும்.
செயற்கைக் கோள்கள் மற்றும் மனிதர்கள் செல்லும் விண்கலம் உட்பட மொத்தம் 1680க்கும் மேற்பட்ட வெற்றிகரமான ஏவுதல்களை இது மேற்கொண்டுள்ளது.