இந்தியாவினுடைய சூரியமின் ஆற்றல் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் பொருட்டு பகிரப்பட்ட சூரிய மின் ஆற்றல் உற்பத்தி பூங்கா உள்கட்டமைப்பு திட்டத்திற்கு [Shared Infrastructure for Solar Parks Project] 100 மில்லியன் டாலர் வழங்கிடுவதற்கான கடன் மற்றும் நிதி ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளன.
நாடு முழுவதும் பெரிய அளவிலான சோலார் பூங்காக்களை அமைத்து அதன் மூலம் சூரிய மின் ஆற்றல் உற்பத்தி திறனை அதிகரிப்பதே பகிரப்பட்ட சூரியமின் ஆற்றல் உற்பத்தி பூங்கா உள்கட்டமைப்பு திட்டத்தின் நோக்கமாகும்.
உலக வங்கியின் அறிக்கைப்படி, இதன் வழியிலான முதல் இரு சோலார் பூங்காக்கள் மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மற்றும் மந்சௌர் மாவட்டத்தில் அமைய உள்ளன.
மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒடிஸா, சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா போன்ற மாவட்டங்களில் உள்ள ஆற்றல் வாய்ந்த சோலார் பூங்காக்களுக்கும் ஆதரவு வழங்கப்பெறும்.