சமீபத்திய ஆய்வு ஒன்றில், மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள பாம்பாடும் சோலைவன தேசியப் பூங்காவானது அரியவகை விலங்கான நீலகிரி மார்டென் (Nilgiri Marten) விலங்கினத்தின் பாதுகாப்பான இடமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புனுகுப் பூனைகளை (Civet) போன்று காட்சியளிக்கும் நீலகிரி மார்டெனானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே (Endemic) வாழக்கூடியவை.
உயர்மட்ட இடங்களையே (Higher altitudes) நீலகிரி மார்டின்கள் பெரும்பாலும் வசிக்க தேர்ந்தெடுக்கும்.
IUCN-ன் சிவப்பு பட்டியலில் நீலகிரி மார்டெனானது பாதிக்கப்படக்கூடிய விலங்கினமாக (vulnerable) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 1972-ன் இந்திய வனஉயிர் பாதுகாப்பு சட்டத்தின் பகுதி 2-ன் அட்டவணை இரண்டின் கீழ் (Schedule II, Part 2 of the Indian Wildlife (Protection) Act 1972) நீலகிரி மார்டென் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
பாம்பாடும் சோலைவன தேசியப் பூங்காவானது கேரளாவின் மிகச்சிறிய தேசியப் பூங்காவாகும்.