வடக்குப்பட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மன்னர் இராஜ இராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த சோழர் கால நாணயம் உட்பட கிட்டத்தட்ட 400 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே அமைந்துள்ளது.
இரண்டாம் கட்ட அகழாய்வின் கண்டுபிடிப்புகளில் கி.பி. 9 மற்றும் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நாணயங்களும் உள்ளடங்கும்.
இந்த நாணயங்களுள் ஒன்று இராஜ இராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஒரு செப்பு வில், செப்பு மூடி, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்களும் இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.