திருச்சி இராச்சந்தர் திருமலையில் உள்ள விராச்சிலை ஆண்டவர் கோயிலில் சோழர் காலத்தினைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒன்று நிலப் பதிவேடு தொடர்பானது என்ற வகையில் மற்றொன்று அந்தக் கோவிலுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு தொடர்பானதுமாகும்.
மூன்றாம் குலோத்துங்கரின் கல்வெட்டு ஆனது நில ஆவணமாகத் கருதப்படுகிறது என்ற நிலையில் இது அந்தக் கோயிலில் உள்ள ‘தேசநாயகப் பெருமாள்’ என்று குறிப்பிடப் படும் வெண்கலச் சிலை குறித்தத் தகவல்களை அளிக்கிறது.
கோயில் அதிகாரிகள் கரையூர் மற்றும் மேற்கரையூர் ஆகிய இடங்களில், மதுராந்தக சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த சில பிராமணர்களிடமிருந்து 3,000 அன்றாடு நற்கூலி (நற்காசு) செலுத்தி இரண்டு நிலங்களை வாங்கியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மற்றொரு கல்வெட்டு ஆனது மன்னரின் தலைமை ஆவண எழுத்தாளரான நேருடை சோழன் மூவேந்த வேலன் என்பவரால் எழுதப்பட்ட மூன்றாம் இராஜராஜனின் ஒரு அரசாணையினை வெளிக் கொணர்கிறது.
இந்த ஆணையின்படி, கோவிலின் தேசநாயகர், நாச்சியார் என்ற இரு வெண்கலச் சிலைகளுக்குச் சொந்தமான இரண்டு வேலி நிலங்களுக்கு அந்தரயம் மற்றும் பட்டம் உள்ளிட்ட அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.