TNPSC Thervupettagam

சௌராஸ் பழங்குடி - வாழ்விட உரிமைகள்

September 9 , 2024 26 days 92 0
  • கஜபதி மாவட்டத்தின் சௌரா பழங்குடியினர் ஒடிசாவில் தங்கள் பூர்வீக நிலங்களின் மீதான வாழ்விட உரிமையைப் பெற்றுள்ளனர்.
  • எனவே, அதிக எண்ணிக்கையிலான எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு (PVTGs) இத்தகைய உரிமைகளை வழங்கும் நாட்டின் ஒரே மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
  • சௌராஸ் பழங்குடியினர் குழுவானது, தங்களின் வாழ்விடத்திற்குள் அமைந்துள்ள இயற்கை கட்டமைப்புகள், புனித தளங்கள் மற்றும் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவும் வளங்காக்கவும் அனுமதிக்கும் உரிமைகளைப் பெறுகின்ற மாநிலத்தின் ஐந்தாவது பழங்குடியினக் குழுவாக மாறி உள்ளது.
  • கஜபதி மாவட்டத்தில் உள்ள சுமார் 128 கிராமங்களில் சௌரா பழங்குடியினர் வசிக்கின்றனர்.
  • 2006 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வன வாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டடத்தின் 3(1) (e) என்ற பிரிவின் கீழ் PVTG குழுக்களுக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப்படுகின்றன.
  • மத்தியப் பிரதேச அரசானது, பரியா PVTG குழுவிற்கும், சத்தீஸ்கர் அரசானது கமர் மற்றும் பைகா  ஆகிய PVTG குழுக்களுக்கும் வாழ்விட உரிமைகளை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்