லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகள் ஒரு புதிய பட்டாம்பூச்சி தொகுதிக்கு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நாவலில் இடம் பெற்றுள்ள வில்லன் சாரோன் எனும் பெயரைச் சூட்டியுள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு பட்டாம்பூச்சி இனங்கள் இந்த சௌரோனா வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
சௌரோனா ட்ரையாங்குலர் மற்றும் சௌரோனா அவுரிகேரா ஆகிய இரண்டும் இக்குழுமத்தின் தொடக்க உறுப்பினர்களின் பெயராகும்.
இவை சௌரோனின் பெயரிடப்பட்ட முதல் உயிரினங்கள் அல்ல.
இந்த வில்லனின் ஒளிரும் கண்ணின் பெயர் ஏற்கனவே சாண வண்டு, தவளை, டைனோசர் போன்ற உயிரினங்களுக்கு இடப்பட்டுள்ளது.