TNPSC Thervupettagam
March 14 , 2024 255 days 353 0
  • V-Dem நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு ஜனநாயக அறிக்கையின் படி, பல்வேறு கூறுகளுக்கான மதிப்பெண்களில் பதிவான வீழ்ச்சியுடன் இந்தியா இன்னும் தேர்தல் வழி எதேச்சதிகாரம் (சர்வாதிகாரம்) கொண்ட நாடாகவே உள்ளது.
  • இந்தியா, 2023 ஆம் ஆண்டில் 10 முன்னணி சுய எதேச்சதிகாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்திய நாடானது, மதிப்பாய்வு செய்யப்பட்ட 179 நாடுகளில் கீழ் நிலையில் உள்ள 40-50% நாடுகளுள் ஒன்றாக இருக்கும். தற்போது நைஜர் (சிறந்த) மற்றும் ஐவரி கோஸ்ட் (மோசமான) நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • 2.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 35% பேர் வசிக்கும் 42 நாடுகளில் எதேச்சதிகார மயமாக்கல் நடந்து வருகிறது.
  • உலக மக்கள்தொகையில் 18% பேர் உள்ள இந்தியா, எதேச்சதிகார நாடுகளில் வசிக்கும் மக்கள்தொகையில் பாதியளவினைக் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, "தெற்கு மற்றும் மத்திய ஆசியா தற்போது உலகின் இரண்டாவது மிகவும் எதேச்சதிகாரம் மிக்க பிராந்தியமாக உள்ளதாக" குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்