TNPSC Thervupettagam

ஜனா சிறு நிதியியல் வங்கி

April 19 , 2018 2268 days 796 0
  • ஜனா சிறு நிதியியல் வங்கி 2019 ஆம் ஆண்டில் 500க்கும் மேற்பட்ட வங்கியியல் சேவைகளை அமைப்பது மற்றும் வங்கிகளற்ற கிராமப்புறப் பகுதிகளிலும் வங்கி சேவைகளை விரிவாக்கம் செய்வது ஆகியவற்றிற்கான தன்னுடைய வங்கியியல் செயல்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
  • இது, இதற்கு முன்னர் ஜனலட்சுமி நிதியியல் சேவைகள் என அழைக்கப்பட்டது.
  • செப்டம்பர் 2015-ல் இந்திய ரிசர்வ் வங்கியானது, ஜனலட்சுமி நிதியியல் சேவைகள் உட்பட 10 மனுதாரர்களுக்கு சிறு நிதியியல் வங்கி உரிமத்திற்கான கொள்கையளவிலான முன்மொழிவை (in-principle approval) வழங்கியது.
  • ஜனா குழுமம் எண்ணியல் முறையிலான சேவையை வழங்குவதுடன் நிதியியல் உள்சேர்ப்பையும் தன்னுடைய முதன்மை நோக்கமாகத் கொண்டுள்ளது.

சிறு நிதியியல் வங்கி

  • சிறு நிதியியல் வங்கியானது பணம் செலுத்துதல் (deposits), கடன் வழங்கல் உள்ளிட்டட நிதியியல் உள்சேர்ப்பு செயல்பாடுகளை மேற்கொள்ளும்.
  • உயர் தொழில்நுட்பம் கொண்ட குறைந்த செலவிலான செயல்பாடுகளின் மூலம், சிறு வணிகப்பகுதிகள், குறு விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா துறை நிறுவனங்கள் ஆகியவற்றை இவ்வங்கி இலக்காகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்