மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்தில் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையம் [CARA – Central Adoption Resource Agency] “ஜன் சம்பார்க்” எனும் மாதாந்திர தத்தெடுப்பு நடைமுறை எளிதாக்குதல் ( Adaption Facilitation Programme ) திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது பொதுமக்களின் கவலைகள் மற்றும் தத்தெடுத்தல் தொடர்புடைய விவரங்களைப் பற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே கலந்துரையாடலை உண்டாக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
CARA (Central Adoption Resource Agency)
CARA வானது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் சட்டபூர்வ அமைப்பாகும் (Statutory body)
ஆதரவற்ற, கைவிடப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் தத்தெடுப்பை கண்காணிக்கும் மற்றும் உள்நாட்டு மற்றும் நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்பை நெறிமுறைப்படுத்துதலை கட்டாய கடமையாக கொண்ட ஓர் உயரிய அமைப்பாகும்.
இந்தியா 2003-ல் நாடுகளுக்கிடையேயான தத்தெடுத்தலுக்கான ஹேக் ஒப்பந்தத்திற்கு (Hauge Convention On Inter Country Adoption) ஒப்புதல் அளித்துள்ளது,
CARA (Central Adoption Resource Agency) இந்தியாவில் இந்த நாடுகளிடையேயான தத்தெடுப்பு கூறுகளை கண்காணிக்கும் மத்திய ஆணையமாக செயல்படுகிறது.
CARA அதன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுத்தலை மேற்கொள்கிறது.