ஜப்பான் தனது நிலவியல் புவியிடங்காட்டி பிணையத்தின் (Terrestrial Positioning Network System) நான்காவது மற்றும் கடைசி செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA – Japan Aerospace Exploration Agency) மிச்சிபிகி – 4 எனும் இந்த செயற்கைக் கோளை H-II A ராக்கெட்டின் மூலம் ஜப்பானின் காகோஷிமாவில் அமைந்துள்ள தனே காஷிமா தீவின் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தியுள்ளது.
Quasi – Zenith என்பது ஜப்பானின் பிராந்திய நிலவியல் புவியிடங்காட்டி பிணையமாகும் (Regional terrestrial positioning network system)
இப்பிணைப்பானது 4 செயற்கைக்கோள்களை கொண்டது. இவை பூமியிலிருந்து 30,000 km லிருந்து 39000 km க்கு இடைப்பட்ட உயரத்தில் புவியிணக்கச் சுற்றுப்பாதையில் (Geo Synchronous) நிலைநிறுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
இயற்கை பேரழிவுகளின் காரணமாக வழக்கமான தகவல் தொடர்பு பிணையங்கள் செயலிழக்கும் போது தகவல் தொடர்பை ஏற்படுத்த இந்த செயற்கை கோள்கள் உதவும்.
திறன்பேசிகள் மற்றும் வாகன வழிகாட்டு அமைப்பிகளில் GPS தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும், GPS ன் பயன்பாட்டை முழுமைப்படுத்துவதற்கும் உதவும் வகையில் இச்செயற்கைக் கோள்கள் செயல்படும்.