TNPSC Thervupettagam

ஜப்பானில் இந்தியாவின் முதல் பெண் விமானி

January 15 , 2023 554 days 261 0
  • படைத் தலைவர் அவனி சதுர்வேதி, வீர் கார்டியன் 2023 எனப்படும் விமானப் பயிற்சியில் பங்கேற்க உள்ளார்.
  • இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி இவரே ஆவார்.
  • பெண் அதிகாரிகள் வெளிநாடுகளில் இந்தியாவின் சார்பாக பிரதிநிதித்துவப் படுத்தும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.
  • இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே இருதரப்பு வான் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • வான்படைப்பிரிவுத் தலைவர் பாவனா காந்த், மோகனா சிங் ஜிதர்வால் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோர் முதல் மூன்று பெண் போர் விமானிகள் மற்றும் Su-30MKI போர் விமானங்களின் விமானிகள் ஆவர்.
  • Su-30MKi என்பது ஒரு பல்துறை போர் விமானம் என்பதோடு, இது வான்வழி முதல் தரை வரையிலான மற்றும் வான்வழி நடவடிக்கைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளக் கூடியத் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்