31 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு திமிங்கல வேட்டையை ஜப்பான் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் ஜப்பான் இந்த வேட்டையை அந்நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களில் மட்டுமே மேற்கொள்ளவிருக்கின்றது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான வறுமையின் காரணமாக ஜப்பானில் பெரிய அளவில் திமிங்கல இறைச்சியின் நுகர்வு தொடங்கியது.
1986 ஆம் ஆண்டில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டையை ஜப்பான் நிறுத்தியது. ஆனால் அங்கு ஆராய்ச்சிக் காரணங்களுக்காக மட்டுமே திமிங்கில வேட்டை அனுமதிக்கப்பட்டது.
இது தற்பொழுது சர்வதேச திமிங்கில வேட்டை ஆணையத்திலிருந்து (IWC - International Whaling Commission) வெளியேறியுள்ளது. எனவே அதன் விதிகளை ஜப்பான் கடைபிடிக்க வேண்டியதில்லை.