ஜப்பான் நாட்டில் பாலியல் உறவிற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது மாற்றம்
July 5 , 2023 510 days 256 0
ஜப்பான் நாட்டுப் பாராளுமன்றமானது (டயட்) 13 ஆக இருந்த பாலியல் உறவிற்கான சட்டப் பூர்வ ஒப்புதல் வயதினை 16 ஆக உயர்த்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் பாலியல் உறவிற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதானது உலகிலேயே மிகக் குறைவாக 13 ஆக இருந்தது.
1907 ஆம் ஆண்டில் அது மாற்றப் பட்டதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஜப்பானின் பாராளுமன்றமானது இந்த முடிவினை எடுத்து உள்ளது.
பாலியல் உறவிற்கானச் சட்டப்பூர்வ ஒப்புதல் வயதிற்குக் கீழான பெண்களுடன் மேற் கொள்ளப் படும் எந்தவொருப் பாலியல் செயல்பாடும் கற்பழிப்பாகக் கருதப் படுகிற நிலையில் இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாகக் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவானது 18 வயதினைப் பாலியல் உறவிற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதாக நிர்ணயித்துள்ள அதேசமயம் பிரிட்டனில் இது 16 ஆகவும், ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 14 ஆகவும் உள்ளது.