அந்நாட்டில் முதன்முறையாக, 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் அல்லது 10 பேரில் ஒருவர் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கடந்துள்ளனர்.
65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஜப்பான் தற்போது உலகின் மிக வயதான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு, ஜப்பானின் மக்கள் தொகையில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 29 சதவீதமாக இருந்தனர்.
2040 ஆம் ஆண்டில், ஜப்பானிய மக்கள் தொகையில் 34.8 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
70 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஜப்பானில் வேலைவாய்ப்பினைக் கொண்டுள்ளனர்.
முதியோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ள நிலையில் அந்த நாட்டின் மக்கள்தொகையில் 24.5 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் ஆவார்.
மூன்றாம் இடத்தில் உள்ள பின்லாந்து நாட்டின் 23.6 சதவீத மக்கள் இந்த வயது வரம்பில் உள்ளனர்.