TNPSC Thervupettagam

ஜப்பான் நிலநடுக்கம்

January 3 , 2024 199 days 255 0
  • 7.6 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஆனது வட-மத்திய ஜப்பானைத் தாக்கியது.
  • அதன் பிறகு, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஆனது இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.
  • இஷிகாவா பிராந்தியத்தில் உள்ள வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலான அலைகள் தாக்கியது.
  • கடந்த வாரம் ஜப்பானின் குரில் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வடகிழக்கு ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான மாபெரும் நிலநடுக்கத்தால் ஜப்பான் கடுமையாக பாதிக்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், ஃபுகுஷிமா கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிழக்கு ஜப்பானின் பெரிய பகுதிகளை உலுக்கியது.
  • தலைநகர் டோக்கியோ, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1923 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினால் சிதைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்