ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அரசுமுறைப் பயணமாக இந்திய வந்துள்ளார்.
ஜப்பான் கடனுதவியுடன் இந்தியாவில் தொடங்கப்படும் ஆமாதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் அடிக்கல் நாட்டினார்.
புல்லட் ரயில் திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் சேவைக்கு ஜப்பான் அரசு 88 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கிறது.
மொத்த வழித்தடத்தில் 92 சதவீத வழித்தடம் உயர்மட்ட மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும். இதில் 7 கி.மீ. தூரம் கடலுக்கு கீழே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது .
இந்த புல்லட் ரயில் திட்டம் வரும் 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆமதாபாத் நகரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள மும்பை நகரை 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.