TNPSC Thervupettagam

ஜம்முவின் முதல் துலீப் தோட்டம்

April 11 , 2018 2452 days 852 0
  • ஜம்மு பகுதியின் ராம்பன் மாவட்டத்தில் சனாசர் என்ற இடத்தில் ஜம்முவின் முதல் துலீப் தோட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
  • இது ஜம்முவில் ஏற்படுத்தப்பட்ட முதல் தோட்டம் ஆகும். மேலும் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஏற்படுத்திய தோட்டத்திற்குப் பிறகு இரண்டாவதாக ஏற்படுத்தப்பட்ட தோட்டமாகும்.
  • இந்த துலீப் தோட்டம் தோட்டக்கலைத் துறையால் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்த வருடம் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தாலான துலீப் மலர்கள் மட்டுமே வளர்க்கப்பட்டு உள்ளன.
  • பாரசீகம் அல்லது ஈரானில் தோன்றிய துலீப் மலர், 17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெவ்வேறு விதமான வகைகளில் அங்கு மேம்படுத்தப்பட்டது. ஹாலந்து மிகப்பெரிய துலீப் மலர்களின் உற்பத்தியாளர் நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்