TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்

October 12 , 2018 2109 days 578 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
  • ஜம்முவில் சுமார் 80 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
  • காஷ்மீரில் 3.4 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
  • ஷரத்து - 35Aன் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டின் காரணமாக, மாநிலத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மெஹ்பூபா முப்தியின் பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆகிய இரண்டும் தேர்தலில் பங்கேற்கவில்லை.
ஷரத்து 35A
  • ஷரத்து 35A ஆனது ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரையின்படி அப்போதைய குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தின் உத்தரவின் பேரில் 1954ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 35A ஆனது ‘நிரந்தர குடியிருப்பாளர்களை’ வரையறை செய்யவும் மற்றும் அவர்களுக்கான சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கவும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சட்ட சபைகளுக்கு அதிகாரமளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்