TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீரில் மார்கோர் காட்டு ஆடு

November 8 , 2024 21 days 93 0
  • அறிவியல் ரீதியாக காப்ரா ஃபால்கோனர் என அழைக்கப்படுகின்ற மார்கோர் காட்டு ஆடுகளின் வாழ்விட இழப்பு, சட்டவிரோதமான வேட்டையாடுதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக அவற்றின் நிலை மோசமாகி வருகின்றன.
  • இது வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள காசினாக் என்ற தேசியப் பூங்காவிலும், தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹிர்போரா என்ற வனவிலங்குச் சரணாலயத்திலும் உள்ளது.
  • இது உலகின் மிகப் பெரிய காட்டு ஆடாகக் கருதப்படுகிறது.
  • இந்தியாவில் மார்கோர் ஜம்மு&காஷ்மீரில் மட்டுமே காணப்படுகிறது.
  • இந்த உயிரினங்கள் ஆனது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதலாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ளதோடு IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் 'அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்' என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • UNGA ஆனது இந்த ஆண்டு முதல் மே 24 ஆம் தேதி சர்வதேச மார்கோர் தினமாக அனுசரிக்கப் படும் என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்