சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் அரசானது 10 உறுப்பினர்களைக் கொண்ட பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்தை அமைத்துள்ளது.
இது 5 பதவி வழி உறுப்பினர்கள் மற்றும் 5 அலுவல் சாராத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆணையமானது உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகளின் உதவியுடன் மக்கள் பல்லுயிர்ப் பெருக்கப் பதிவேட்டைப் பராமரிக்கின்றது.
இந்தப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையமானது பொது நிர்வாகத் துறையினால் வழங்கப் பட்டுள்ள ஆணையின்படி, தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்துடன் இணைந்து ஆலோசனை அடிப்படையில் செயல்படவுள்ளது.
பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பின்வரும் 3 நிலைகளில் பல்லுயிர்ப் பெருக்கக் குழுக்களினால் கண்காணிக்கப் படவுள்ளன.