அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 29(1)ன் கீழ் ஜல்லிக்கட்டை தங்களுடைய கலாச்சார பாரம்பரியமாக தமிழ்நாடு மக்களால் பாதுகாக்க முடியுமா என்பதன் மீது முடிவை எடுக்க உச்சநீதி மன்றமானது ஜல்லிக்கட்டு விவகாரத்தை உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்பு அமர்வுக்கு (Constitution Bench) மாற்றியுள்ளது.
குடிமக்களுடைய கல்வியியல் மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாக்கும் ஓர் அடிப்படை உரிமையே விதி 29 (1) ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி III-இல் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் விதி 29(1)-ன் கீழ் ஓர் கூட்டு கலாச்சார உரிமையாக (collective cultural right) ஜல்லிக்கட்டிற்கு அரசியலமைப்புப் பாதுகாப்பு (Constitutional Protection) வழங்குவது தொடர்பான கோரிக்கையை உச்சநீதி மன்றமானது முதல் முறையாக கருத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.